search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை கழகம்"

    • தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.
    • நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.

    5-ந்தேதி (திங்கள்) சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன்சாவடியில் உள்ள கஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் கருத்து கேட்பார்கள்.

    மாலை 5 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கிருஷ்ணா மகாலில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    6-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணி முதல் மாடூர் ஏ.என்.பி. மஹாலில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை ரோடு பி.எல்.ஏ. மஹாலில் தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலகத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களிடம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். மஹாலில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மண்டலம், திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மதுரை மண்டலம், காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மண்டலம், காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக செயலாளர் களும்,. நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள், மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற் சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).

    தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    • துரோக வரலாற்றில் ஓ.பி.எஸ். இடம் பிடித்துவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா?.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-

    தமிழகத்தில் 50 ஆண்டு களாக சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெற்று தந்த அ.தி.மு.க. இயக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கினார்.

    அதன்பின் ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி, உலக தலைவர்கள் பாராட்டும் வழியில் புரட்சிதலைவி இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக மாற்றி சிறப்பாக வழிநடத்தி னார்கள்.

    தற்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகை யில் கழக ரீதியில் 70 மாவட்ட கழகச் செயலா ளர்கள், 70க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், 2500 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் தி.மு.க.வை எதிர்க்க சிம்ம சொப்பனமாகவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொண்ட ர்களின் கோரிக்கை யை ஏற்று எடப்பாடியார் இடைக்கால பொதுச் செய லாளராக பொறுப்பேற்றார்

    அதனைத் தொடர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் சுட்டுவது போல் விழா நடைபெற்ற போது அங்கு லட்சுமணனாய் உடனி ருந்து அந்த தியாகத்தில் இடம்பெற்றார். அதே சேவையால் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர் அந்தக் கோட்டை தாண்டி சென்னையில் அ.தி.மு.க. தொண்டர்களின் கோவி லாக வணங்கும் தலைமை கழகத்தில் வன்முறையை நிகழ்த்தி உள்ளார் ஒ.பி.எஸ்.இதன்மூலம் துரோக வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

    ஓ.பி.எஸ். 3 முறை தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி ஆற்றும்பணிக்கு கோயிலாக இடம் பெற்றிருக்கும் தலைமை கழகத்தை ரவுடி களால், குண்டர்க ளால், காட்டுமிராண்டிகளால் இவர்களை வைத்து காலால் எட்டி உதைக்கும் சம்பவத்தை கண்டு தொண்டர்கள் இதயத்தில் ரத்தம் வடிந்து வருகிறது. இவர் செய்த செயலால் தலைமை கழகத்தை சீல் வைக்கும் வகையில் முடிந்து உள்ளது

    அலுவலகத்தில் இருந்த கோப்புகள் எல்லாம் ஓ.பி.எஸ். வந்த வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா? இது ஒன்றரைகோடி கழகத் தொண்டர்களின் சொத்தாகும்.

    கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையில் இதுபோன்று ஈடுபட்டால் அம்மா பேரவை ராணுவப்படையாக பாதுகாப்பு பணியில் முன்னே நிற்று அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தை யும் காக்கும் தியாக பொறு ப்பில் இருப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×